×

குமரியில் கோயில்கள், வீடுகளில் கொலு வைத்து சிறப்பு பூஜை 7ம்தேதி ஆயுதபூஜை கொண்டாட்டம்

நாகர்கோவில், செப்.30:  நவராத்திரி விழா தொடங்கியதை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் உள்ள கோயில்கள், வீடுகளில் கொலு வைத்து பூஜைகள் தொடங்கினர்.புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி 10 நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா நேற்று (29ம்தேதி) தொடங்கியது. இந்த விழாவின் 9 வது நாளான 7ம் தேதி ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையும், 10ம் நாளான, 8ம் தேதி விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது. நவராத்திரி விழா நடக்கும் 9 நாட்களிலும் வீடுகளில் கொலு வைக்கும் நிகழ்ச்சி அரங்கேறும். முதல் 3 நாட்கள் துர்க்கையை வேண்டியும், அடுத்த 3 நாட்கள் லட்சுமியை வேண்டியும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதி தேவியை போற்றியும் வழிபாடு செய்யப்படுகிறது. நவராத்திரியின் போது பெண்கள் வீடுகளில் கொலு வைத்து, விரதம் இருந்து, அம்மனை வழிபட்டால் நன்மை கிடைக்கும் என்பது நம்பிக்கை.

நவராத்திரியின் முக்கிய அம்சம் கொலு வைப்பதாகும். அதன்படி நேற்று காலை முதல் வீடுகளில் கொலு வைத்து பூஜைகள் தொடங்கினர். 3 முதல் 9 படிகள் என அவரவர் வசதிக்கு ஏற்ற படி அமைத்து கொலு பொம்மைகளை அலங்கரித்து வைத்து இருந்தனர். தசாவதாரம், திருமணம், அறுபடை வீடு, அஷ்டலஷ்மி, ஆண்டாள் திருமஞ்சனம், கிருஷ்ண லீலை, சீதா கல்யாணம், வாஸ்து லட்சுமி, விஸ்வரூபம், சீமந்தம் செட் பொம்மைகள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை என வகைவகையான கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு இருந்தன. 9 நாட்களும் பூஜைகள் நடத்தி கொலு வழிபாடு நடத்தி அக்கம் பக்கத்தினரை அழைத்து மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, பழம் மற்றும் குங்கும சிமிழ், ஜாக்கெட் துணிகள், சிறிய அளவிலான பாத்திரங்களை வழங்குவார்கள்.

நவராத்திரியையொட்டி கோயில்களிலும் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், மண்டைக்காடு பகவதியம்மன் கோயில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில், நாகர்கோவில் நடுக்காட்டு இசக்கியம்மன் கோயில், வடசேரியில் உள்ள காமாட்சியம்மன் கோயில் உள்ளிட்ட அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. கோயில்களிலும் கொலு வைக்கப்பட்டு இருந்தன. காலையி
ேலயே கோயில்களில் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

Tags : Pooja ,Temples ,Homes ,Kumari ,
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு