×

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கன்னியாகுமரியில் அக்.2ல் காந்தி நினைவு பாதயாத்திரை புதுவை முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைக்கிறார்

நாகர்கோவில், செப்.30:  கன்னியாகுமரியில் வரும் அக்டோபர் 2ம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெறுகின்ற மகாத்மாகாந்தி நினைவு பாத யாத்திரையை புதுவை முதல்வர் நாராயணசாமி தொடக்கி வைக்கிறார். மகாத்மாகாந்தியின் 150ம் ஆண்டு பிறந்தநாள் நிறைவு விழாவையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மகாத்மாகாந்தி நினைவு பாத யாத்திரை வரும் அக்டோபர் 2ம் தேதி புதன்கிழமை மாலை 4 மணிக்கு கன்னியாகுமரியில் நடைபெறுகிறது. கன்னியாகுமரி அருகே கொட்டாரம் சந்திப்பு காமராஜர் சிலை முன்பு இருந்து பாத யாத்திரை தொடங்குகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகிக்கிறார். குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ வரவேற்கிறார். கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகிக்கிறார். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பாதயாத்திரையை தொடங்கி வைக்கிறார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் சஞ்சய்தத், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் சிறிவல்ல பிர சாத், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் எச்.வசந்தகுமார் எம்.பி, செயலாளர் மயூரா ஜெயக்குமார்,  எம்.எல்.ஏ,க்கள் பிரின்ஸ், விஜயதரணி உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் நடை பயணமாக கன்னியாகுமரியை சென்றடைகின்றனர். பின்னர் கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் மரியாதை மற்றும் காமராஜர் மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியுடன் பாத யாத்திரை நிறைவு பெறும். பின்னர் அங்கு நடைபெறுகின்ற நிறைவு நிகழ்ச்சியில் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் பேசுகின்றனர்.இந்த நிகழ்ச்சிகளில் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, மாநில காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள், வட்டார, நகர தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர்.

Tags : Narayanasamy ,Gandhi Memorial Walk ,Kanniyakumari ,Tamil Nadu Congress Committee ,
× RELATED தேனி தொகுதி அதிமுக வேட்பாளர், கட்சி...