×

மல்லாங்கிணறு பேரூராட்சியில் ‘டெங்கு’ தடுக்க நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்

காரியாபட்டி, செப். 30;காரியாபட்டி அருகே மல்லாங்கிணறு பேரூராட்சியில் டெங்கு நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடைபெற்றது. காரியாபட்டி அருகே மழை காலம் துவங்குபோது மக்களுக்கு ஏற்படும் நோய்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கவும், டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மல்லாங்கிணறில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலர் முருகன் முகாமினை துவக்கி வைத்து கசாயம் வழங்கினார். பேரூராட்சி அலுவலர்கள் பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார். மேலும் மல்லாங்கிணர் பஸ் நிறுத்தம் அருகில் பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு, ஆனந்தி கலைக்குழு மூலமாக பிளாஸ்டிக் ஒழிப்பு, மழைநீர் சேகரிப்பு, தூய்மை இந்தியா திட்டம் மற்றும் மரம் வளர்ப்பதை ஊக்குவிக்கும் முகமாக விழிப்புணர்வு பிரச்சாரமும் மேற்கொள்ளப்பட்டது.

Tags : Reservoir camp ,
× RELATED மேட்டுப்பாளையம் அருகே டெங்கு...