×

திருச்சுழி அருகே கல்லுமடத்தில் விபத்து ஏற்படுத்தும் வகையில் மகளிர் சுயஉதவிக்குழு கட்டிடம்

திருச்சுழி, செப். 30: திருச்சுழி அருகே விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ள மகளிர் சுயஉதவிக்குழு கட்டிடத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சுழி அருகே கல்லுமடம் கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள குழந்தைகள் படிப்பதற்கு பாலர் பள்ளி கட்டிடம் உள்ளது. இதில் 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். பள்ளிக்கு முன்பாக பாழடைந்த இடிந்து விழும் நிலையில் மகளிர் சுயஉதவிக்குழு கட்டிடம் உள்ளது. இக்கட்டிடம் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு கட்டபட்டது. தற்போது முற்றிலும் சிதலமடைந்து விஷப்பூச்சி தங்கும் கூடாரமாக உள்ளது. பள்ளியில் படிக்கும் குழந்தைகள் இக்கட்டித்திற்கு முன்பாக விளையாடுகின்றனர். இக்கட்டிடம் எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் பணியாளர்கள் உள்ளனர். இதுசம்மந்தமாக அதிகாரிகளிடம் தெரிவித்தாலும் நடவடிக்கை எடுக்கபடவில்லையென கூறுகின்றனர்.

இதுகுறித்து குழந்தைகளின் பெற்றோர்கள் கூறுகையில், எங்கள் கிராமத்தில் உள்ள பாலர் பள்ளிக்கு முன்பாக இடிந்து விழும் நிலையில் அரசு கட்டிடம் உள்ளது. இக்கட்டிடம் முழுவதும் முற்றிலும் விரிசல் ஏற்பட்டு காணப்படுகிறது. எங்களது குழந்தைகள் பழுதான கட்டிடத்திற்கு முன்பாகத்தான் விளையாடுகின்றனர். தற்போது மழை காலம் என்பதால் எப்போது கட்டிடம்இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறோம். விபத்து ஏற்படுவதற்கு முன்பு இக்கட்டிடத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறினர்.

Tags : Women's ,
× RELATED திருப்பூர் வடக்கு மகளிர் காவல் நிலைய பெண் ஆய்வாளருக்கு கொரோனா