கருப்பசாமி கோயில் புரட்டாசி திருவிழா

வருசநாடு, செப்.30: வருசநாடு அருகே உப்புத்துறை மாளிகைப்பாறை கருப்பசாமி கோவிலில் புரட்டாசி அமாவாசை திருவிழா நடைபெற்றது.

இதில் அன்னதானம், அருள்வாக்கு சொல்லுதல், பொங்கல் வைத்தல், கிடா பலியிடுதல், யாகம்வளர்த்தல், ஹோமம் வளர்த்தல் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோவில்பூசாரி கருப்பசாமி பொதுமக்களுக்கு அருள்வாக்கு அளித்தார். இதில் கிராமநிர்வாக குழு உறுப்பினர்கள் பூங்கொடி, மாரியப்பன், துரைச்சாமி, வழக்கறிஞர் மகேஷ், ஆல்பாடி, அழகர் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து அருள்வாக்கு கேட்பதற்காக ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் புரட்டாசி மாதத்தில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். தொடர்ந்து மூன்று நாள் அருள்வாக்கு சொல்வது நடைபெறுவது குறிப்பிடத்தக்கது

இதேபோல் வருஷநாடு கிராமத்தில் லட்சுமிநாராயணப் பெருமாள்கோவில் முகூர்த்தகால் நடும் பணி நடைபெற்றது. இதற்கு லட்சுமி நாராயண பெருமாள் கோவில் அர்ச்சகர் வேல்முருகன் தலைமை வைத்து சிறப்பு பூஜை நடத்தி முகூர்த்தக்கால் நடப்பட்டது. கிராம முக்கியஸ்தர்கள் உத்திரன், முருகன், அய்யர், பந்தல்சுரேஷ், உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>