×

மதுரை அரசு மருத்துவமனை சார்பில் இருதய நல விழிப்புணர்வு பேரணி

மதுரை,  செப்.30: உலக இருதய தினத்தை முன்னிட்டு, மதுரை அரசு மருத்துவமனை  இருதயவியல் துறை சார்பில், இருதய நல விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. டீன் வனிதா கொடி அசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.  மருத்துவமனையில் தொடங்கிய பேரணி பனகல் ரோடு, கலெக்டர் அலுவலகம்,  மருத்துவக்கல்லூரி வழியாக இந்திய மருத்துவர் சங்க கட்டிடத்துக்கு  வந்தடைந்தது. இதில், 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இருதயநலத்  துறை சிகிச்சைத்துறைத் தலைவர் வீரமணி, அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர்  ரத்தினவேல், பேராசிரியர் பாலசுப்பிரமணியன் மற்றும் துறை மருத்துவர்கள்  கலந்து கொண்டனர்.இதனையடுத்து மருத்துவமனை ஆடிட்டோரியத்தில் இருதய  நலம் தொடர்பான மருத்துவ கருத்தரங்கம் நடந்தது. டீன் வனிதா தலைமை வகித்தார்.  மருத்துவக் கண்காணிப்பாளர் சங்குமணி, துறைத்தலைவர்கள், துறைசார்ந்த  மருத்துவர்கள் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட  டாக்டர் கண்ணன் உடற்பயிற்சி மற்றும் இருதய ஆரோக்கியம் குறித்து பேசினார்.  டாக்டர் செல்வராணி இருதயமும் பெண்களும் என்ற தலைப்பில் பேசினார். கவிஞர்  கண்ணதாசன் நற்பணிமன்றத் தலைவர் சொக்கலிங்கம் நலம்தரும் நகைச்சுவை என்ற  தலைப்பில் பேசினார்.

Tags : Madurai Government Hospital ,
× RELATED புதிய கல்விக் கொள்கை குறித்து...