நவராத்திரி விழா தொடக்கம்

மேலூர், செப். 30: மேலூர் அருகே தும்பைப்பட்டியில் உள்ள ஸ்ரீசங்கரநாராயணசுவாமி, கோமதியம்மன் கோயிலில் புரட்டாசி மாத மஹாளய அம்மாவாசை சிறப்பு வழிபாடு மற்றும் நவராத்திரி விழா தொடங்கியது. இதையொட்டி மக்களின் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும், மழை பெய்து விவசாயம் செழித்தோங்கவும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகளுடன் கூடிய சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை ரமேஷ் அய்யர், சங்கரன் நாராயணர் கோயில் கல்வி, அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags : Navratri Festival ,
× RELATED ஊத்துக்கோட்டை கோயில்களில் நவராத்திரி விழா கொண்டாட்டம்