×

நவராத்திரி கொலுவை பார்வையிடும் பக்தர்கள் திருமங்கலம் அருகே குறைந்த மின்னழுத்தத்தால் பழுதாகும் மின்சாதனங்கள் நடவடிக்கை எடுக்குமா மின்வாரியம்

திருமங்கலம், செப். 30:  திருமங்கலம் அருகே, குறைந்த அழுத்த மின்சாரத்தால், வீடுகளில் மின்சாதனப் பொருட்கள் பழுதாவதாக கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். திருமங்கலம் அருகே, வடகரை ஊராட்சியில், சுங்குராம்பட்டி கிராமம் உள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். கடந்த மூன்று மாதமாக இக்கிராமத்தில் குறைந்த அழுத்த மின்சாரம் வருவதால், வீடுகளில் டிவிக்கள், பேன்கள், பிரிட்ஜ், மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட மின்சாதப் பொருள்கள் பழுதாவதாக புகார் தெரிவிக்கின்றனர். சில வீடுகளில் டிவிக்கள் வெடிப்பதாக கூறுகின்றனர். இது குறித்து திருமங்கலம் மின்வாரியத்தில் கிராம மக்கள் புகார் அளித்தும், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இது குறித்து விஜய் என்பவர் கூறுகையில், ‘குறைந்த மின்னழுத்த மின்சாரம் வருவதால் மாணவ, மாணவியர் படிக்க முடியவில்லை. இரவில் பேன் சரியாக சுற்றுவதில்லை. முதியவர்கள், குழந்தைகள் தூக்கமின்றி தவிக்கின்றனர். மின்சாதனப் பொருட்களும் பழுதாகின்றன. திருமங்கலம் மின்வாரியத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதே நிலை தொடர்ந்தால் மின்வாரியத்தை கண்டித்து போராட்டம் நடத்துவோம்’ என்றார்.

Tags : Devotees ,Navaratri Kolu ,Thirumangalam ,
× RELATED திருப்பதி கோயிலுக்கு பக்தர்கள்...