×

எம்.வாடிப்பட்டி, திண்டுக்கல்லில் தி.மு.க. இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம்

பட்டிவீரன்பட்டி, செப். 30: எம்.வாடிப்பட்டியில் சேவுகம்பட்டி நகர் கழகம் சார்பில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
திமுக வில் இளைஞரணி சார்பில் புதிதாக இளைஞர்களை சேர்ப்பதற்காக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் எம்.வாடிப்பட்டியில் நடைபெற்றது. முகாமிற்கு நகர செயலாளர் தங்கராஜ் தலைமை வகித்தார். வத்தலக்குண்டு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அசோக்குமார், முன்னிலை வகித்தார். வத்தலக்குண்டு திமுக ஒன்றிய செயலாளர் கே.பி.முருகன் புதிய உறுப்பினர் சேர்க்கையை துவக்கி வைத்தார். எம்.வாடிப்பட்டி, சேவுகம்பட்டி, நாகலாபுரம், முத்துலாபுரம் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களை திமுக இளைஞரணியில் புதிய உறுப்பினராக தங்களை இணைத்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் வத்தலக்குண்டு முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் ராஜேந்திரன், சேவுகம்பட்டி இளைஞரணி அமைப்பாளர் கணேசன் மற்றும் நிர்வாகிகள் தனபால், போத்திராஜ், பொன்னையா உட்பட பலர் கலந்து கொண்டனர். திண்டுக்கல்: திண்டுக்கல்லில் 17, 18 வார்டுகளில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு நகர செயலாளர் ராஜப்பா தலைமை வகித்தார். நகர துணைச் செயலாளர்கள் ராஜா, கலாவதி, மாவட்ட பிரதிநிதி பாண்டி, நகர இளைஞரணி அமைப்பாளர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என பலரும் தங்களை இளைஞரணியில் உறுப்பினர்களாக இணைத்து கொண்டனர். மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் அருள்வாணி, நகர் மகளிரணி துணை அமைப்பாளர் ஆரோக்கிய செல்வி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே ஜவ்வாதுபட்டியில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாமை அர.சக்கரபாணி தலைமை வகித்து துவக்கி வைத்தார். திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் ப.வேலுச்சாமி முன்னிலை வகித்தார்.

முகாமில் ஜவ்வாதுபட்டி, ஜோகிபட்டி, வெரியப்பூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் கலந்துகொண்டு கழகத்தில் இணைத்துக்கொண்டனர். விழாவில் ஒன்றிய செயலாளர் சோதீஸ்வரன், பொருளாளர் செல்லமுத்து, ஊராட்சி செயலாளர்கள் அர்ஜூணன், சந்திரசாமி, சுப்பிரமணி, இளைஞரணி அமைப்பாளர் முருகானந்தம், தலைமைக் கழக பேச்சாளர் தீக்கனல் கருணாநிதி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


Tags : M. Vadipatti ,Dindigul ,DMK ,Youth Member Admission Camp ,
× RELATED திண்டுக்கல்லில் ரூ.4.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்