×

உழவுப்பணி மும்முரம் சின்னாளபட்டியில் மாநில அளவிலான ரோல்பால் ஸ்கேட்டிங் தமிழகத்தில் 25 மாவட்ட அணிகள் பங்கேற்பு

திண்டுக்கல், ெசப். 30: சின்னாளபட்டி பிரிவில் உள்ள ராஜன் உள் விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டிகள் செப்-29, 30 மற்றும் அக்-1 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறுகிறது. தொடக்கவிழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு மாநில ரோல்பால் சங்க பொதுச்செயலாளர் சுப்பிரமணி தலைமை வகித்தார். மாநில பொருளாளர் பூபதி, திண்டுக்கல் மாவட்ட தலைவர் டி.வாஞ்சிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் மாவட்ட ரோல்பால் சங்க செயலாளர் பிரேம்நாத் வரவேற்றார். காந்திகிராம ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் டி.ராஜன் போட்டிகளை துவக்கி வைத்து வாழ்த்தி பேசினார். 10 முதல் 14 வயதிற்கு உட்பட் மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான இந்த போட்டிகளில் திண்டுக்கல், திருச்சி, மதுரை, சேலம், தஞ்சாவூர், விருதுநகர், கோவை, ஈரோடு, காஞ்சிபுரம், கடலூர், சிவகங்கை, தேனி உட்பட 25 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் பங்கு பெறுகின்றனர்.

லீக், நாக் அவுட் முறையில் நடைபெறும் இந்த போட்டிகளில் 25 ஆண்கள் அணியும், 15 பெண்கள் அணியும் கலந்து கொள்கின்றன. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித் தனியாக, போட்டிகள் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் சிறந்த 12 வீரர் மற்றும் 12 வீராங்கனைகள் அகில இந்திய போட்டிக்கு தமிழ்நாடு அணி சார்பாக கலந்து கொள்வர். அகில இந்திய போட்டி பூனாவில் நடைபெறுகிறது. ரோல்பால் ஸ்கேட்டிங் நடுவர்களாக கலையரசன், சக்தி, மரியதாஸ், கிருஷ்ணகுமார், ஜெயசீலன், அசோக்குமார், விக்னேஷ், பிரதீப் மற்றும் தீபக் ஆகியோர் செயல்பட்டனர்.

Tags : District ,teams ,Tamil Nadu ,
× RELATED நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில்...