×

பழநி கோயிலில் நவராத்திரி விழா காப்புகட்டுதலுடன் துவக்கம்

பழநி, செப். 30: பழநி கோயிலில் நவராத்திரி விழா காப்புக்கட்டுதலுடன் துவங்கி உள்ளது.பழநி கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று நவராத்திரி. 11 நாட்கள் நடைபெறும் இவ்விழா நேற்று மலைக்கோயிலில் காப்புகட்டுதலுடன் துவங்கியது. மலைக்கோயிலில் உச்சிகாலத்தில் விநாயகர், மூலவர், உற்சவர், நவவீரர்கள், துவாரபாலகர்கள், தீபஸ்தம்பத்திற்கு காப்புகள் கட்டப்பட்டன. நிகழ்ச்சியில் பழநி கோயில் இணை ஆணையர் ஜெயச்சந்திரபானு ரெட், உதவி ஆணையர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழா நடைபெறும் 11 நாட்களும் பெரியநாயகி அம்மன் கோயிலில் பக்திச் சொற்பொழிவு, மங்கள இன்னிசை, பக்தி இன்னிசை, பரத நாட்டியம், கிராமிய நடனம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
விழாவின் 11 நாளான அக்டோபர் 8ம் தேதி மலைக்கோயிலில் பகல் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறும். பிற்பகல் 2.45 மணிக்கு மலைக்கோயிலில் இருந்து பராசக்திவேல் பெரியநாயகி அம்மன் கோயிலுக்கு வந்தடையும் நிகழ்ச்சி நடைபெறும். மாலை 6 மணிக்கு தங்கக்குதிரை வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி கோதைமங்கலம் புறப்பட்டு அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறும். இந்நிகழ்ச்சியில் பழநி ஆதீனம் சிவானந்த புலிப்பாணி சுவாமிகள் வன்னிகாசூரனை வதம் செய்யும் நிகழ்வு நடைபெறும்.

தங்கரத புறப்பாடு நிறுத்தம்
நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு நேற்று முதல் அக்.8ம் தேதி வரை 10 நாட்களுக்கு மலைக்கோயிலில் தங்கரத புறப்பாடு நிறுத்தம் செய்யப்படும். 9ம் தேதி வழக்கம்போல் தங்கரத புறப்பாடு நடைபெறும்.உக்ரைன் பக்தர்கள் வருகை நவராத்திரியை முன்னிட்டு வடக்கு கிரிவீதியில் உள்ள புலிப்பாணி ஆசிரமத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்நிகழ்ச்சியை காண உக்ரைன் நாட்டில் இருந்து ஏராளமான பக்தர்கள் புலிப்பாணி ஆசிரமத்திற்கு வந்து தங்கி உள்ளனர்.

Tags : Opening Ceremony of Navratri Festival ,Palani Temple ,
× RELATED ஊரடங்கு முடிந்ததும் பழநி கோயிலில் செல்போனுக்கு கட்டணம் வசூலிக்க முடிவு?