×

திண்டுக்கல் மலையடிவார பத்ரகாளியம்மன் கோயில் தசரா பண்டிகை

திண்டுக்கல், செப். 30: திண்டுக்கல் மலையடிவார பத்ரகாளியம்மன் திருக்கோவில் தசரா பண்டிகை விழா கொடியேற்றம் நடைபெற்றது.திண்டுக்கல் மலைடிவாரததில் அமைந்துள்ளது அருள்மிகு பத்ரகாளியம்மன் கோயில். இங்கு ஆண்டுதோறும் தசரா பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதை முன்னிட்டு நேற்று கொடியேற்றத்துடன் திருவிழா நேற்று தொடங்கியது. முன்னதாக கோயில் முன் மண்டபத்தில் சிறப்பு யாகம் நடைபெற்றது. பின்னர் துணியில் அம்மனின் படம் வரையப்பட்ட கொடியை பிரகாரம் சுற்றி வலம் வந்து கொடி மரத்தில் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது.இதை தொடர்ந்து சூலாயதத்திற்கு சிறப்பு பூஜையும் அபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து 10 நாட்கள் தசரா விழா கொண்டாடப்படுகின்றது. பின்னர் 10ம் நாள் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

Tags : Dussehra Festival ,
× RELATED தசரா விழா எதிரொலி: திண்டுக்கல்...