×

பெருமாநல்லூரில்அதிரடி சோதனை பார்,கடைகளில் இருந்து 200 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் ரூ.15 ஆயிரம் அபராதம்

அவிநாசி, செப்.30: பெருமாநல்லூர் ஊராட்சியில் கடைகள் மற்றும் டாஸ்மாக் பாரில் பயன்பாட்டிற்காக வைத்திருந்த 200 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரூ.15000  அபராதம் விதிக்கப்பட்டது. பெருமாநல்லூர் ஊராட்சி பகுதிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) கனகராஜ் தலைமையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர். பெருமாநல்லூர் நால்ரோடு பகுதியில் உள்ள மளிகை கடைகள், டாஸ்மாக் பார், சந்தைப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 200 கிலோ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்தனர்.மேலும்  பிளாஸ்டிக் பைகள் வைத்திருந்த கடைகளுக்கு ரூ.15 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த ஆய்வின்போது, பெருமாநல்லூர் ஊராட்சிகளின் செயலர்கள் மகேஷ் செந்தில், தமிழரசன்  மற்றும்  தன்னார்வ அமைப்பை சேர்ந்தவர்கள் உடனிருந்தனர்.

Tags : Perumanallur ,stores ,
× RELATED 3 நாட்கள் விடுமுறை எதிரொலி; டாஸ்மாக்...