×

காவலர்கள் இல்லாத புறநகர் காவல்நிலையம்

உடுமலை, செப்.30: உடுமலை அருகே உள்ள கொழுமத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோயில் உள்ளது. தினசரி இங்கு ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். விசேஷ தினங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்கவும், ஜேப்படி பேர்வழிகளை கண்காணிக்கவும், பக்தர்களை ஒழுங்குபடுத்தவும் இங்கு புறநகர் காவல்நிலையம் அமைக்கப்பட்டது. இதற்காக கோயில் நிர்வாகம் சார்பில், போலீஸ் பூத் கட்டிக்கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த புறநகர் காவல்நிலையம் எப்போதும் காலியாகவே இருக்கிறது. இங்கு எந்த காவலர்களும் இருப்பதில்லை. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக கயல்விழி இருந்தபோது, காவல்துறை,பொதுமக்கள் தொடர்பை பலப்படுத்தும் வகையில் கிராமம்தோறும் பிரன்ட்ஸ் ஆப் போலீஸ் குழு ஏற்படுத்தப்பட்டது.

ஒவ்வொரு காவலர்களுக்கும் ஒரு ஏரியா ஒதுக்கப்பட்டு, அவர்களின் செல்போன் எண்கள் விளம்பரப்படுத்தப்பட்டு, எந்த பிரச்சினையானாலும் சம்பந்தப்பட்ட காவலரை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த திட்டம் செயல்பாட்டில் இல்லை. அறிவிக்கப்பட்ட செல்போன் எண்களை தொடர்பு கொண்டால் யாரும் எடுப்பதில்லை.உடுமலை நகரிலும் இதே நிலைதான் உள்ளது. தற்போது, அனைத்து காவல்நிலையங்களிலும் எஸ்ஐக்கள் மற்றும் காவலர்கள் மாற்றப்பட்டுள்ள நிலையில், புதிய எண்களை அறிவித்து, இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். புறநகர் காவல்நிலையங்களில் காவலர்கள் நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : police station ,
× RELATED இரணியல் காவல் நிலையத்தில் இருந்து...