×

காட்டேரி டேம்-முட்டிநாடு சேறும் சகதியுமான சாலையால் கடும் அவதி

ஊட்டி, செப்.30: ஊட்டி அருகேயுள்ள காட்டேரிடேம் முதல் முட்டிநாடு வரை செல்லும் சாலை மிகவும் பழுதடைந்துள்ளதால் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் செல்ல முடியாமல் கடும் அவதிக்கள்ளாகியுள்ளனர்.  ஊட்டி அருகே காட்டேரி டேம், கோலமட்டம், செல்வீப் நகர், முட்டிநாடு, ஓரநள்ளி ஆகிய பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்கள், அனைத்து தேவைகளுக்கும் ஊட்டி அல்லது குன்னூர் ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. மேலும், இந்த கிராமங்களை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் மலை காய்கறி விவசாயம் செய்து வருகின்றனர். இவர்கள், உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் அனைத்தும் இச்சாலை வழியாகவே லாரிகள் மூலம் ஊட்டி, குன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள மண்டிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும்.

 அதேபோல், இந்த கிராமங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி ெசல்லும் மாணவர்கள் இச்சாலையை பயன்படுத்த வேண்டியுள்ளது. ஆனால், இச்சாலை மிகவும் பழுதடைந்துள்ளதால், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக, மலை காய்கறி விவசாயிகள் தங்களது காய்கறிகளை லாரிகள் மூலம் கொண்டுச் செல்லும் போது, பள்ளங்களில் வாகனங்கள் சிக்கிக் கொள்வதால் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். குறித்த சமயத்தில் காய்கறிகளை கொண்டுச் செல்ல முடிவதில்லை. இச்சாலையை சீரமைக்க வேண்டும் என தொடர்ந்து இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.  ஆனால், இச்சாலைமை சீரமைக்க அதிகரட்டி பஞ்சாயத்து மெத்தனம் காட்டி வருவதால், சாலை மேலும் பழுதடைந்து விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் இச்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags : road ,Vampire Dame-Muttinadu ,
× RELATED கோழிக்கோடு பீச் சாலையில் கார்...