×

காந்தி ஜெயந்தி பாதயாத்திரையில் பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும் காங் மாவட்ட தலைவர் மனோகரன் அழைப்பு

கோவை, செப்.30: காந்திய கொள்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் நடக்கும் காந்தி ஜெயந்தி தின பாதயாத்திரையில் பொதுமக்கள் திரளாக பங்கேற்க கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி.எம்.சி மனோகரன் அழைப்பு விடுத்துள்ளார்.இதுகுறித்து வி.எம்.சி மனோகரன் கூறியிருப்பதாவது, மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளையொட்டி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரியின் வழிகாட்டுதலின் படி, கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் காந்திய கொள்கைகளை வலியுறுத்தியும், அவரின் அகிம்சை குறித்த போதனையை மக்களிடம் எடுத்து செல்லும் வகையிலும் பாதயாத்திரை நடைபெறுகிறது. சூலூர் சட்டமன்ற தொகுதியிலுள்ள சாமளாபுரத்தில் மாலை 4 மணியளவில் துவங்கும் இந்நிகழ்ச்சியை தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் துவக்கி வைக்கிறார். கருமத்தம்பட்டி பேரூராட்சியில் உள்ள சோமனூர் பவர்ஹவுஸ் சந்திப்பில் நிறைவு பெறுகிறது. இதைத்தொடர்ந்து மாலை 6 மணியளவில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

 இதில், தமிழ்நாடு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுசாமி, செயல் தலைவர் மோகன்குமாரமங்கலம் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். முன்னதாக மகாத்மா காந்தி, லால் பகதூர் சாஸ்திரி, காமராஜர் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்வு நடக்கிறது. இந்த நிகழ்ச்சிகளில் காங்கிரஸ் கட்சியினர், நிர்வாகிகள் மட்டுமல்லாது, பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் ஆகியோர் பெருந்திரளாக கலந்து கொண்டு காந்திய கொள்கைகளை அனைவரிடமும் கொண்டு சேர்க்கவேண்டும்.

Tags : Manoharan ,public ,Gandhi Jayanthi Yatra ,
× RELATED கிண்டி காந்தி மண்டப வளாகத்தில்...