உலக இருதய தினத்தையொட்டி மாரத்தான் போட்டி 1,500 பேர் பங்கேற்பு

ஈரோடு, செப். 30:   உலக இருதய தினத்தையொட்டி ஈரோட்டில் மாரத்தான் போட்டி நடந்தது. இதில் 1,500க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் என பலர் பங்கேற்றனர்.   உலக இருதய தினம் நாடு முழுவதும் நேற்று (29ம் தேதி) கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி ஈரோடு வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில் உலக இருதய பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ‘நம்ம ஈரோடு மாரத்தான் அன்ட் வாக்கத்தான்’ என்ற பெயரில் மாரத்தான் போட்டி நேற்று நடந்தது. இந்த மாரத்தான் போட்டியில் சிறப்பு அழைப்பாளராக ஈரோடு எஸ்.பி. சக்தி கணேசன் கலந்து கொண்டு, கொடியசைத்து போட்டியை துவக்கி வைத்தார்.

வ.உ.சி. மைதானத்தில் துவங்கிய மாரத்தான் மேட்டூர் ரோடு, அரசு மருத்துவமனை, பிரப் ரோடு, பன்னீர் செல்வம் பார்க், மணிக்கூண்டு, மூலப்பட்டறை வழியாக மீண்டும் வ.உ.சி. மைதானத்தில் நிறைவடைந்தது. இந்த மாரத்தானில் எஸ்.பி. சக்தி கணேசனும் பங்கேற்று இலக்கினை ஓடி முடித்தார்.   இதில் முதல் 50 இடங்களை பிடித்தவர்களுக்கு மெடல்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இதில் 1,500க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர், சிறுமிகள் கலந்து கொண்டனர்.

Tags : World Heart Day Marathon Competition ,participants ,
× RELATED எஸ்ஐ எழுத்து தேர்வில் 3833 பேர் பங்கேற்பு