×

சின்னமனூரில் வறட்சியை சமாளிக்க ஸ்பிரிங்லர் முறைக்கு மாறும் விவசாயிகள்

சின்னமனூர், செப். 26: சின்னமனூரில் வறட்சியை சமாளிக்க சொட்டுநீரை வீணாக்காமல் பயன்படுத்த ஸ்பிரிங்லர் முறைக்கு விவசாயிகள் மாறி வருகின்றனர். சின்னமனூர் நகர ஒன்றிய கிராமங்களில் பெரியாறு மற்றும் மழையால் நிலத்தடிநீர் பாசனத்தில் தொடர் விவசாயம் நடைபெறுகிறது. அதன்படி பெரியாறு ஆற்று பாசனத்தில் நான்காயிரம் ஏக்கரில் இருபோகம் நெல் சாகுபடி நடக்கிறது. மேலும் நிலத்தடிநீர் பாசனத்தின் மூலம் வாழை, திராட்சை, தென்னை, புடலை, கத்திரி, வெங்காயம், கேரட், சீனி அவரை, வெண்டைக்காய், முள்ளங்கி, பீட்ரூட், முட்டைகோசு, காலி பிளவர் போன்ற பயிர்களும் சாகுபடி நடக்கிறது.

பருவமழை பொய்த்தாலும் குடிநீருக்கும், விவசாயத்திற்கும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனைத் தவிர்க்கும் பொருட்டு சொட்டுநீர் பாசனத்தில் சாகுபடி விவசாயம் செய்து வருகின்றனர். இதனால் பாசனநீர் வீணாகாமல் விவசாயத்தை விவசாயிகள் விரிவு படுத்தி செய்து வருகின்றனர். தற்போது மாற்று முறையான சுழற்சி வழியில் ஸ்பிரிங்லர் பொருத்தி விவசாயம் செய்து வருகின்றனர். இதனால் பாசன நீர் வீணாகாமல் பயிர் வளர்ச்சிக்கு உதவுவதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதனால் குறைந்த செலவில் ஸ்பிரிங்லர் பொருத்துவதற்கு விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது வெங்காயம், காய்கறி விவசாயத்திற்கு ஸ்பிரிங்கலர் முறை மூலம் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.

Tags : Chinnamanur ,drought ,
× RELATED சின்னமனூர் ஓடைப்பட்டி பொன்ராஜ் குளத்தில் பெயரளவு ஆக்கிரமிப்பு அகற்றம்