×

அரசு மருத்துவமனையில் உலக மருந்தாளுநர் தினம்

உத்தமபாளையம், செப்.26: உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் உலக மருந்தாளுநர் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன.
உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் உலக மருந்தாளுநர் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமை மருந்தாளுநர் கண்காணிப்பாளர் கண்ணபிரான் தலைமை தாங்கினார். மருந்தாளுநர் பாண்டியன், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக தலைமை மருத்துவ அதிகாரி (பொறுப்பு), ரியாஷ் சிறப்புகள் பற்றி பேசினார். மயக்கவியல் டாக்டர் மனோஜ், அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கௌதம், சித்தமருத்துவ தெரபிஸ்பெசலிஸ்ட் டாக்டர் சுவாமிநாதன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

மருந்தாளுநர் தினத்தின் சிறப்புகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து கேக்வெட்டி கொண்டாடப்பட்டது. ஆஸ்பத்திரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சியில் பெண்கள் சிறப்பு மருத்துவர் டாக்டர் ஜமீலாபானு, செவிலியர் கண்காணிப்பாளர் மாரியம்மாள், அலுவலக கண்காணிப்பாளர் கருணாகரன், மருந்தாளுநர்கள் டெய்சி, பரீதாஜான், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Tags : World Pharmacists Day ,Government Hospital ,
× RELATED அரசு மருத்துவமனை வளாகத்தில்...