×

வருவாய்த்துறை அலுவலர் சங்கம் கலெக்டருடன் பேச்சுவார்த்தை

மதுரை, செப். 26: துணைதாசில்தார் பதவி உயர்வு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்துடன் கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தி 3 நாளில் நடவடிக்கை எடுக்க உறுதியளித்துள்ளார். மதுரை மாவட்ட வருவாய்த்துறையில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் மற்றும் நேரடி நியமன உதவியாளர் சங்கம் என இரண்டு பிரிவுகள் உள்ளன. இவர்களுக்குள் துணைதாசில்தார் பதவி உயர்வு தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேரடி நியமன உதவியாளர்களுக்கு துணைதாசில்தார் பதவி உயர்வு வழங்குவதில் ஐகோர்ட் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக்கோரி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று முன்தினம் மாலை கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக கலெக்டர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ‘துணதாசில்தார் பதவி உயர்வை ரத்து செய்யும் அதிகாரம் கலெக்டருக்கு இல்லை. இந்த பிரச்னை தொடர்பாக மாநில வருவாய் நிர்வாக ஆணையருக்கு பரிந்துரைக்கப்படும். அவர்கள் எடுக்கும் முடிவின்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார். இதையடுத்து போராட்டத்தை விலக்கிக் கொண்டனர். இதுதொடர்பாக வருவாய்த்துறை அலுவலர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில்,‘ பதவி உயர்வு தொடர்பாக 3 நாளில் கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். அவர் காலம் தாழ்த்தினால் அடுத்த கட்ட போராட்டம் குறித்து சங்கம் முடிவு செய்யும்’ என்றார்.

Tags :
× RELATED மேலூர் அருகே பீரோவை உடைத்து நகை, பணம் திருட்டு