×

150வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை வந்தது காந்தியடிகளின் ‘கைத்தடி’ மாதிரி

மதுரை, செப். 26: தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் 150வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, டெல்லி அருங்காட்சியகத்தில் உள்ள காந்தியடிகளின் கைத்தடி போல ஒரு மாதிரியை உருவாக்கி, காந்தியை நினைவுறுத்தும் வகையில், அந்த மாதிரி கைத்தடியுடன் அந்தமானில் தொடங்கி ‘யங் இந்தியா’ நண்பர்கள் ஐந்து பேர் கொண்ட குழு நாடு முழுவதும் வலம் வருகின்றனர். செப்.19ல் தமிழகம் வந்த அவர்கள், கோவை வழியாக திருப்பூர் சேலம் ஈரோடு சென்று நேற்று மதுரை வந்தனர். தொடர்ந்து கொச்சின், திருவனந்தபுரம், புதுச்சேரி, ஆந்திர மாநிலம் அமராவதி வழியாக அக்.2ல் அகமதாபாத் சபர்மதி ஆசிரமம் சென்றடைகின்றனர். இந்த ஆசிரமம் காந்தியடிகள் துவக்கிய முதல் ஆசிரமம்.  நேற்று மதுரை காந்திமியூசியம் வந்த இவர்களுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.  காந்தியடிகளில் கைத்தடி மாதிரியை, காந்தி சிலை பகுதியில் வைத்து, அது குறித்த சிறப்புகள் எடுத்துரைக்கப்பட்டன.

இது குறித்து மதுரை காந்தி மியூசிய இயக்குநர் நந்தாராவ் கூறுகையில், ‘காந்தியடிகள் உப்புச்சத்தியாகிரகம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களின் போதும் நடைபயணத்தில் கைத்தடி பயன்படுத்தினார். இதன் ஒரிஜினல் டெல்லியில் இருந்தபோதும், கைத்தடி மாதிரியை சுமந்து, அவரது பிறந்தநாளில் நாடு முழுக்க வலம் வந்துள்ளனர். காந்தியடிகளின் அங்கமாக இந்த கைத்தடி இருந்திருக்கிறது. இக்குழுவினர் காந்தி பொட்டல் உள்ளிட்ட நகரின் பல இடங்களுக்கும் சென்று, பொதுமக்கள் பார்வைக்கும் காட்சிப்படுத்தி வலம் வந்தது சிறப்பாகும்’’ என்றார்.

Tags : occasion ,birthday ,Madurai ,Gandiyas ,
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...