×

அரசு போக்குவரத்து கழக நிர்வாகத்தை கண்டித்து செக்கானூரணி பணிமனையில் கண்டக்டர்கள் திடீர் போராட்டம்

திருமங்கலம், செப். 26: செக்காணுரணியில் அரசு போக்குவரத்து கழக நிர்வாகத்தை கண்டித்து கண்டக்டர்கள் நேற்று திடீர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருமங்கலம் அருகே, செக்காணுரணியில், அரசு போக்குவரத்து கழக கிளை உள்ளது. இந்த பணிமனையில் மொத்தம் 42 பஸ்கள் உள்ளன. இந்த பணிமனையைச் சேர்ந்த கண்டக்டர்கள் பயணிகளுக்கு மெஷின் மூலம் வழங்கும் டிக்கெட்டுகள் பெரும்பாலும் வெள்ளைத்தாளாக வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் அரசு போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், செக்கானூரணி பணிமனை முன்பு 40க்கும் மேற்பட்ட கண்டக்டர்கள் திரண்டு, போக்குவரத்துக்கழகத்தை கண்டித்து நேற்று மதியம் போராட்டம் நடத்தினர். அப்போது, ‘பயணிகளுக்கு டிக்கெட் வழங்கும் இடிஎம் மெஷின்களை மாற்றி புதிதாக மெஷின்கள் வழங்க வேண்டும். கணினி மையத்தில் சரியில்லாத பிரிண்டர் மெஷினை மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால், பணிமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து கண்டக்டர்கள் சிலர் கூறுகையில், ‘இந்த பணிமனையில் இருந்து கம்பம், கோவை, திருச்செந்தூர் செல்லும் வெளியூர் பஸ்களும், மதுரை நகரின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் சிட்டி பஸ்களும் இயக்கப்படுகின்றன. கடந்த சில மாதங்களாக பணிமனையில் கணினி பிரிண்டர் சரியில்லை. இன்வாய்ஸ் உள்ளிட்டவைகளை நிரப்ப சிரமங்கள் ஏற்படுகின்றன. இதேபோல மெஷின்கள் மூலமாக டிக்கெட் கொடுத்தால் வெள்ளை பேப்பர்தான் வருகின்றன. பயணிகளின் டிக்கெட் கட்டணம், ஊரின் பெயர் வருவதில்லை. இதனால், வீணாக தகராறுகள் ஏற்படுகின்றன. இதனை சீரமைக்ககோரி போராட்டம் நடத்தினோம்’ என்றனர்.

Tags : Conductors ,workshop ,
× RELATED வாக்களிப்பதற்கு எந்த வசதியும் செய்து...