×

பழநியில் தொல்லியல் பயிலரங்கம்

பழநி, செப். 26: பழநி அரசு அருங்காட்சியகத்தில் பழநியாண்டவர் மகளிர் கல்லூரியின் வரலாற்றுத்துறை சார்பில் சிற்பங்கள் குறித்து தொல்லியல் பயிலரங்கம் நேற்று துவங்கியது. கல்லூரியின் முதல்வர் புவனேஸ்வரி பயிலரங்கை துவக்கி வகித்தார். அருங்காட்சியக காப்பாட்சியர்கள் சிவக்குமார், கோவிந்தராஜ், கல்லூரியின் வரலாற்று துறைத்தலைவர் திலகதி முன்னிலை வகித்தனர். பயிலரங்கில் சிற்பவியல் தொழில்நுட்பங்கள், பண்டைய எழுத்துக்கள், நடுகற்கள், கல்வெட்டு படியெடுப்பு, கல்வெட்டு வாசிப்பு பயிற்சி, சிற்பங்கள், நாணயங்கள், ஓலைச்சுவடிகள் ஆகியவற்றை சுத்தம் செய்யும் முறை குறித்து பயிற்றுவிக்கப்பட்டது. இதில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டனர். வரும் 27ம் தேதி வரை பயிலரங்கம் நடக்கிறது.

Tags : workshop ,Palani ,
× RELATED பொதட்டூர்பேட்டையில் ஆய்வு அரசு...