×

உடுமலை, பொள்ளாச்சி வழியாக ராமேஸ்வரம்-மங்களூர் ரயில் இயக்கம்

உடுமலை, செப். 26:  ராமேஸ்வரம்- மங்களூர் இடையே வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் திண்டுக்கல், பழனி, உடுமலை, பொள்ளாச்சி, பாலக்காடு, சொர்னூர் வழியாக இயக்கப்படும். திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் ராமேஸ்வரத்தில் இரவு 9.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மறுநாள் மதியம் 1.15 மணிக்கு மங்களூரை சென்றடையும். இதேபோல், மறுமார்க்கத்தில் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மங்களூரில் மாலை 4.50  மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் காலை 9.30 மணிக்கு ராமேஸ்வரத்தை அடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Tags : Rameswaram-Mangalore Railway Operation ,Pollachi ,Udumalai ,
× RELATED பொள்ளாச்சி, உடுமலை வழியாக கோவை-சென்னை...