×

கல்லட்டி நீர்வீழ்ச்சி

ஊட்டி, செப். 26: தொடர் மழை காரணமாக ஊட்டி அருேகயுள்ள கல்லட்டி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.    ஊட்டியில் இருந்து மசினகுடி பகுதிக்கு செல்லும் வழியில் கல்லட்டி மலை உள்ளது. ஊட்டியில் இருந்து கூடலூர் வழியாக மைசூர் செல்வதை காட்டிலும் மசினகுடி - கல்லட்டி வழியாக செல்வதால் நேரம் மற்றும் தூரம் குறைவு என்பதால் இச்சாலையை பெரும்பாலான சுற்றுலா பயணிகள் பயன்படுத்துகின்றனர். தற்போது இச்சாலையில் ஊட்டியில் இருந்து உள்ளூர் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன. ஊட்டியில் இருந்து முதுமலை செல்லும் மலை பாதையில் 15 கொண்டை ஊசி வளைவில் கல்லட்டி நீர் வீழ்ச்சி ஒன்று உள்ளது. நீலகிரி வனக்கோட்டத்திற்குட்பட்ட சோலூர், காமராஜ் சாகர் அணை மற்றும் தலைகுந்தா பகுதியில் மழை பெய்தால், இந்த நீர் வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டும். வனப்பகுதிக்கு நடுவே நீர் வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுவது தொலைவில் இருந்து பார்க்கும் போது ரம்மியமாக இருக்கும்.  இந்நிலையில் கடந்த இரு மாதங்களாக நல்ல மழை பெய்து வரும் நிலையில் கல்லட்டி நீர்வீழ்ச்சியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனை பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து வருகின்றனர்.

Tags :
× RELATED நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி...