×

மாவட்டத்தில் 141.5 மி.மீ., மழை பதிவு கடும் குளிரால் பொதுமக்கள் பாதிப்பு

ஊட்டி, செப். 26:  நீலகிரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்து வரும் நிலையில் கடும் குளிர் நிலவி வருகிறது. கடந்த 4 நாட்களாக ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உட்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்தது. குறிப்பாக ஊட்டி நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மாலை நேரங்களில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் சேரிங்கிராஸ், கூட்ஷெட், பஸ் நிலையம், படகு இல்ல சாலை, காந்தல் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. கழிவுகளுடன் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால், பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். மழை காரணமாக கடும் குளிர் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் குல்லா, ஜர்க்கின் அணிந்தபடி வெளியில் செல்கின்றனர். நேற்று காலை முதல் அவ்வப்போது சாரல் மழை பெய்தது. மழை தொடர வாய்ப்புள்ளதால் இடர்பாடுகளை தவிர்க்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகம் அனைத்து துறைகளையும் உஷார்படுத்தியுள்ளது.  மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழையளவு (மி.மீ.,): ஊட்டி 40.5, கல்லட்டி 23, கிளன்மார்கன் 10, நடுவட்டம் 21, அவலாஞ்சி 7, எமரால்டு 3, கெத்தை 2, அப்பர்பவானி 8, குன்னூர் 5, ேகத்தி 3, கோத்தகிரி 1, கூடலூர் 10, தேவலாலா 8 என மொத்தம் நீலகிாி மாவட்டத்தில் 141.5 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

Tags : public ,district ,rainfall ,
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...