×

பந்தலூர் அருகே அத்திமரத்தை வெட்டியதால் பரபரப்பு

பந்தலூர், செப். 26:பந்தலூர் அருகே தமிழக ,கேரளா எல்லைப்பகுதியான தாளூர் சோதனைச்சாவடி அருகே இருந்த அத்திமரத்தை இரவு நேரத்தில் வெட்டியதால் சர்ச்சை.   தமிழக- கேரளா எல்லையில் தாளூர் கிராமம் அமைந்துள்ளது. இப்பகுதியில் வனத்துறை மற்றும் வருவாய்துறை சோதனைச்சாவடிகள் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு அப்பகுதியில் உள்ள கழிப்பறையை சுத்தம் செய்வதாக கூறி அதன் அருகே இருந்த பழமையான நிழல் தரும் அத்திமரத்தின் கிளையை வாலிபர்கள் இரவோடு இரவாக வெட்டி அகற்றியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு சோதனைச்சாவடியில் பணியில் இருந்த போலீசாரும், வனத்துறையினரும் சம்பவம் குறித்து தெரியவில்லை என கூறியுள்ளனர். இது அப்பகுதி சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி வாலிபர்கள் கூறியதாவது: சேரங்கோடு பஞ்சாயத்து கழிப்பறை பொதுமக்களுக்கு பயன் இல்லாமல் மூடி கிடந்தது. அதனை வாலிபர்கள் சார்பில், வெள்ளை அடித்து தூய்மை செய்து, அக்.2ம் தேதி திறக்க நடவடிக்ைக எடுத்துள்ளோம். இதனால் கழிப்பறை அருகே இடையூறாக இருந்த அத்தி மரத்தின் ஒருபகுதியை வெட்டி அகற்றினோம் என்றனர்.

Tags : Bandalur ,
× RELATED அடிப்படை வசதிகள் கேட்டு தேர்தலை...