×

விதிமுறைகளை மீறிய விடுதிகளுக்கு ‘நோட்டீஸ்’

திருப்பூர், செப்.26:  திருப்பூரில் விதிமுறை மீறிய 32 விடுதிகளுக்கு, உணவு பாதுகாப்புத்துறையினர் நோட்டீஸ் வழங்கினர்.  திருப்பூர் மாவட்டத்தில், உணவு பாதுகாப்புத்துறையினர், பள்ளி சத்துணவு கூடங்கள், அங்கன்வாடி மையங்கள், அம்மா உணவகங்கள், தனியார், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர் விடுதிகளில் தொடர் ஆய்வு நடத்தி வந்தனர். மாவட்டத்தில் உள்ள, 22 பள்ளிகள் மற்றும் எட்டு கல்லுாரிகளில் ஆய்வு நடத்தப்பட்டது. மொத்தம், 64 விடுதிகளில் ஆய்வு நடத்தியதில், 50 சதவீத விடுதிகள் விதிமுறைகளை மீறி செயல்படுவதை கண்டறிந்துள்ளனர். மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறியதாவது: மாவட்டத்தில் இதுவரை, 64 விடுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டது. அவற்றில், 14 விடுதிகளில் தரமற்ற உணவு தயாரிக்கப்படுவது கண்டறியப்பட்டது, மேலும், 18 விடுதிகள் உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் செயல்பட்டதும் தெரியவந்துள்ளது. அதன்படி, 32 விடுதிகளுக்கும் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. உணவு தயாரிப்பு பணியில் ஈடுபடும் தொழிலாளர், கட்டாயம் மருத்துவ சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். தொற்று நோய் உள்ளவர்களை பணியில் அமர்த்தக்கூடாது. துாய்மையான, தரமான உணவுகளை மட்டும் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என, விடுதி நிர்வாகங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இவ்வாறு, அவர் கூறினார்.

Tags : hotels ,
× RELATED இன்று காதலர் தினம் கொண்டாட்டம் புதுவை ஓட்டல்களில் சிறப்பு சலுகைகள்