×

சூலூர் அருகே தாறுமாறாக ஓடிய தனியார் பேருந்து டிரைவருக்கு பயணிகள் தர்ம அடி

சூலூர்,செப்.26.;சூலூரில் அசுர வேகத்தில் இயக்கப்பட்ட தனியார் பேருந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து டிரைவருக்கு பயணிகள் தர்ம அடி கொடுத்ததோடு, பஸ்சின் முன்பக்க கண்ணாடியை அடித்து நொறுக்கினர். கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து நேற்று மாலை 4 மணியளவில் சூலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தை பட்டணத்தைச் சேர்ந்த நிர்மல் (27) என்பவர் ஓட்டினார்.இதில் 31 பயணிகள் இருந்துள்ளனர்.பேருந்து சிங்கநல்லூரிலிருந்து அசுர வேகத்தில் இயக்கப்பட்டது. பேருந்தில் இருந்த பயணிகள் பஸ்சின் வேகத்தை கண்டு மிகுந்த பீதியடைந்தனர். மேலும் டிரைவரை மெதுவாக ஓட்டும்படி சிலர் அறிவுறுத்தி உள்ளனர். ஆனால் அதை கண்டுகொள்ளாமல் பேருந்தை வேகமாக இயக்கி உள்ளார்.  இந்த பேருந்து கண்ணம்பாளையம் வைரக் கம்பெனி அருகே வந்து கொண்டிருக்கும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த காட்டிற்குள் புகுந்தது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் டிரைவர் நிர்மலுக்கு  தர்மஅடி கொடுத்து பேருந்தின் முன்பக்க கண்ணாடி மற்றும் சைடு கண்ணாடிகளை உடைத்து நொறுக்கினர்.இச்சம்பவத்தின்  கண்டக்டர் தப்பி ஓடி விட்டார்.அதைத் தொடர்ந்து பேருந்து சூலூர் காவல் நிலையம் கொண்டு வரப்பட்டது.
விபத்து குறித்து யாரும் புகார் கொடுக்காத்தால் பேருந்தை போலீசார்  திருப்பி அனுப்பி வைத்தனர்.

Tags : bus driver ,Sulur ,
× RELATED சூலூர் அருகே கோயிலில் செம்பு கலசம் திருட்டு