×

அரசு மருத்துவமனையில் மருந்தாளுநர் தினம்

கோவை, செப். 26:கோவை அரசு மருத்துவமனையில் உலக மருந்தாளுநர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது.  சர்வதேச மருந்தாக்கியல் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட செப்டம்பர் 25ம் தேதி, உலக மருந்தாளுநர் தினமாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இதனை இந்திய மருந்தியல் கழகம் அங்கீகரித்து, ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 25ம் தேதி மருந்தாளுநர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மருந்தாளுநர்களின் பங்கை ஊக்கப்படுத்தும் வகையிலும், அவர்களின் பங்கு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையிலும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி, நேற்று கோவை அரசு மருத்துவமனையில் உலக மருந்தாளுநர் தினம் கொண்டாடப்பட்டது. மருத்துவமனையின் டீன் அசோகன் தலைமை வகித்தார். இதில், மருத்துவமனை கண்காணிப்பாளர் சடகோபன், மருந்தாளுநர்கள் 30க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று கேக் வெட்டி கொண்டாடினர்.

Tags : Pharmacist Day ,Government Hospital ,
× RELATED அரசு மருத்துவமனையில் இருந்து 50,000 பேர் குணமடைந்தனர்