×

பெருந்துறையில் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அமைக்கப்படும்

ஈரோடு, செப். 26:  ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் விரைவில் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அமைக்கப்படும் என ஈரோடு எஸ்பி சக்தி கணேசன் தெரிவித்தார்.  ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கோபி, பவானி, பெருந்துறை, சத்தி ஆகிய 5 சப் டிவிசன்களில் பெருந்துறையை தவிர்த்து மீதமுள்ள 4 இடங்களில் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. இதனால், பெருந்துறை பகுதியை சேர்ந்த பெண்கள், அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு ஈரோடு மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கே வந்து புகார் அளிக்க வேண்டி உள்ளது. ஈரோடு மகளிர் போலீசார் பெருந்துறை பகுதி பெண்களின் பிரச்னைக்கு அதிக முக்கியத்துவம் தராமல் தட்டி கழித்தும் வந்தனர். இதனால், பெருந்துறை பகுதி பெண்கள் பல்வேறு மன உளைச்சலுக்கும் ஆளாகி வருகின்றனர். இந்நிலையில், பெருந்துறை பகுதியில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க மாவட்ட காவல் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு எஸ்பி சக்தி கணேசன் கூறியதாவது:பெருந்துறை சப் டிவிசனில் மட்டும் தான் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இல்லை. இதனால், அவர்கள் ஈரோடு மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து புகார் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. இதன்காரணமாக, ஈரோடு போலீசாருக்கு பணிச்சுமையும் அதிகம் இருந்து வருகிறது.இதைத்தவிர்க்க, பெருந்துறையில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது, ஐஜி அலுவலகத்திற்கு மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு போலீசார் ஒதுக்கீடு செய்ய பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதன்பின், பெருந்துறை போலீஸ் ஸ்டேஷன் எதிரே கோர்ட் வளாகத்திற்கு அருகில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க அரசுக்கு பரிந்துரைக்கப்படும். விரைவில் பெருந்துறையில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அமைக்கப்படும் இவ்வாறு சக்தி கணேசன் கூறினார்.

Tags : Women Police Station ,Perundurai ,
× RELATED ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு...