10 தாலுகாவில் நாளை சிறப்பு குறைதீர் கூட்டம்

ஈரோடு, செப். 26: ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 தாலுகாவில் 27ம் தேதி (நாளை) அம்மா திட்டம் மற்றும் சிறப்பு குறைதீர் கூட்ட முகாம் நடக்கிறது.அதன்படி, ஈரோடு தாலுகாவில் நசியனூர் விஏஓ அலுவலகத்திலும், பெருந்துறை தாலுகாவில் கந்தாம்பாளையம் இ-சேவை மைய வளாகத்திலும், மொடக்குறிச்சி தாலுகாவில் வேலம்பாளையம் விஏஓ அலுவலகத்திலும், கொடுமுடி தாலுகாவில் வெங்கம்பூர் விஏஓ அலுவலகத்திலும் நடக்கிறது.பவானி தாலுகாவில் பி.மேட்டுப்பாளையம் பேரூராட்சி மன்ற அலுவலகத்திலும், சத்தி தாலுகாவில் பகுத்தம்பாளையம் விஏஓ அலுவலகத்திலும், கோபி தாலுகாவில் சந்திராபுரம் விஏஓ அலுவலகத்திலும் முகாம் நடக்கிறது.அந்தியூர் தாலுகாவில் சென்னம்பட்டி விஏஓ அலுவலகத்திலும், தாளவாடி தாலுகாவில் தாளவாடி ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், நம்பியூர் தாலுகாவில் லாகம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற மாவட்ட நிர்வாகம்  சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Tags : Special Oversight Meeting ,Taluk ,
× RELATED கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டம்