×

மரக்கன்று நடும் விழா

பெருந்துறை, செப்.26:  அரசு ஐ.ஆர்.டி. பெருந்துறை மருத்துவக் கல்லூரி மற்றும் கோவை ராயல் கேர் மருத்துவமனையின் அங்கமான “உயிரின் சுவாசம்” அமைப்பு ஆகியோர் இணைந்து 2022ம் ஆண்டுக்குள் இரண்டு மாவட்டங்களில் 2 கோடி மரக்கன்றுகள் நடும் இலக்கினை மையமாக வைத்து நேற்று அரசு பெருந்துறை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 500 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.  கல்லூரியின் முதல்வர் ராஜேந்திரன் மரக்கன்றினை நட்டு நிகழ்சியை துவக்கி வைத்தார். உடன் கல்லூரியின் துணை முதல்வர், துணை கண்காணிப்பாளர், உயிர் சுவாசம் அமைப்பின் மேலாளர் கல்லூரியின் பணியாளர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர். தொடர்ந்து உயிர் சுவாசம் அமைப்பின் சார்பில் இலவசமாக வழங்கப்படும் மரக்கன்றுகளை பெற்று பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ராமலிங்கம் காசநோய் மருத்துவமனை வளாகங்களில் நடும் பணி தொடரும் என கல்லூரியின் முதல்வர் தெரிவித்தார்.

Tags : Planting Ceremony ,
× RELATED மணக்குடி அரசு பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா