×

ராஜபாளையம் பாலிடெக்னிக் கல்லூரியில் மின்னணுவியல் துறையில் புதிய செயல் திட்ட அறிமுக விழா

ராஜபாளையம், செப். 26: ராஜபாளையம் பி.ஏ.சி. ராமசாமி ராஜா பாலிடெக்னிக் கல்லூரியில் ஜான்சன் லிப்ட் பிரைவேட் லிமிடெட் சென்னை மற்றும் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை இணைந்து நடத்திய செங்குத்து போக்குவரத்து அமைப்பு என்ற தொழில் சார்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட பாடத்திற்கான செயல் திட்ட அறிமுக விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் பொறுப்பு சீனிவாசன் வரவேற்றார். ராம்கோ கல்வி குழுமத்தின் முதன்மை கல்வி அதிகாரி முனைவர் வெங்கட்ராஜ் தலைமையுரை மற்றும் ஜான்சன் லிப்ட் நிறுவனத்தின் துணை பொதுமேலாளர் பாதுகாப்பு மற்றும் பயிற்சி துறையை சேர்ந்த சதீஷ்ஜா சிறப்புரை ஆற்றினர்.

மேலும் இவ்விழாவில் மூன்றாம் ஆண்டு மின்னியல் மற்றும் மின்னணுவியல் மாணவர்கள் 20 பேர் இப்படத்திற்கான இந்நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட பயிற்சிக்குப் பின் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். இதில் மின்னியல் துறை தலைவர் ரமேஷ்குமார் ஜான்சன் லிப்ட் நிறுவனத்தின் துணை பயிற்சி மேலாளர் ஜார்ஜ் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் ராஜகோபால் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆசிரியர் வேல்முருகன் செய்திருந்தார்.

Tags : Rajapalayam Polytechnic College ,
× RELATED விருதுநகரில் சதம் அடித்து விளையாடும்...