×

வத்திராயிருப்பு முத்தாலம்மன் பொங்கல் திருவிழா தேரோட்டம் தாசில்தார் தலைமையில் ஆலோசனை கூட்டம்

வத்திராயிருப்பு, செப். 26: வத்திராயிருப்பு முத்தாலம்மன் பொங்கல் திருவிழா தேரோட்டத்தையொட்டி தாசில்தார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. வத்திராயிருப்பில் புரட்டாசி மாதம் மழை வேண்டியும் விவசாயம் செழிக்கவும் ஊர் ஒற்றுமைக்காகவும் காவல் தெய்வமாக இருக்கக்கூடிய முத்தலாம்மன் பொங்கல் திருவிழாவையொட்டி வருகிற 1ம் தேதி வடக்கு வாசல் செல்லாயி அம்மன் மது பொங்கல் சாட்டுதல், 8ம் தேதி முத்தலாம்மன் மது பொங்கல் சாட்டுதல், 9ம் தேதி முதல் 15ம் தேதி வரை ஒவ்வொரு நாள் இரவும் நாதஸ்வர கச்சேரி முதல் தொடங்கி பட்டிமன்றம், ஆன்மீக சொற்பொழிவு உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

அக்.15ம் தேதி நள்ளிரவு முத்தாலம்மன் தேரில் அமர்ந்து 16ம் தேதி வரை தேரோட்டம் நடைபெற உள்ளது. முத்தலாம்மன் திருக்கோயில் கலைநிகழ்ச்சி மற்றும் 16ம் தேதி தேரோட்டம் நடைபெறுவதையொட்டி வத்திராயிருப்பு வருவாய் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தாசில்தார் ராஜா உசேன் தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர் மூக்கன், கோயில் செயல் அலுவலா் சுரேஷ் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தேரோடும் வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை மரக்கிளைகளையும் பேரூராட்சி நிர்வாகம் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதியை குறிப்பிடும் வகையில் பணியன் அணிதல் மற்றும் கோசங்கள் போடுதல் கூடாது.

பிளாஸ்க் போடுகள் முத்தாலம்மன் சவுடியில் வைக்கக்கூடாது. தேர் செல்லும் வீதிகளில் போதிய டூம் லைட் வசதி ஏற்பாடுகள் கமிட்டி சார்பாக செய்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானம் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் எஸ்.எ.நாகராஜ் தீயணைப்பு நிலை அலுவலர் பாஸ்கரன், மண்டல துணை வட்டாட்சியர் கலைச்செல்வி, வருவாய் ஆய்வாளா் மாரிமுத்து வி.எ.ஓ. பாலசுப்பிரமணியன் மற்றும் ஊரிலுள்ள அனைத்து சமுதாய பிரமுகரக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Vattrayaippu Muttalamman Pongal Festival ,Therottom Dasildar A Consultative Meeting ,
× RELATED செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சிக்கு...