×

அருப்புக்கோட்டையில் அண்ணா பிறந்தநாள் விழா அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பங்கேற்பு

அருப்புக்கோட்டை, செப். 26: அருப்புக்கோட்டை நகர ஒன்றிய அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வெள்ளக்கோட்டை எம்ஜிஆர் திடலில் நடந்தது. பொதுக்குழு உறுப்பினர் வீரசுப்பிரமணி தலைமை வகித்தார். மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் சோலைசேதுபதி, முன்னாள் ஒன்றிய சேர்மன் யோகா வாசுதேவன், 1வது வார்டு பொறுப்பாளர் புளியம்பட்டி சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  முன்னாள் மண்டலச் செயலாளர் ராமர் வரவேற்றார். விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், அமைச்சருமான ராஜேந்திரபாலாஜி கூட்டத்தில் பங்கேற்று பேசியதாவது: மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.  இந்தியாவிலேயே கல்வித்துறைக்கு தமிழகத்தில்தான் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது.  உலகளவில் வெளிநாட்டு தொழில்நுட்பங்களுடன் பால்வளத்துறையை மேம்படுத்தி வருகிறோம். வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றிகரமான தோல்வி தான். விரைவில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் அனைத்து பதவிகளிலும் அதிமுக கைப்பற்றும். தற்போது நாங்குநேரி, விக்கிரபாண்டி. இரண்டு இடைத்தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறும். அதிமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறது’ என்றார்.

நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் ராஜவர்மன், செல்வமோகன்தாஸ், நகரத்துணைச் செயலாளர் முனியசாமி, நகரத்தலைவர் பாம்பாய் மணி, பொருளாளர் செந்தமிழ்செல்வன், மாணவரணி மாவட்டத் தலைவர் மோகன்வேல், அசோக் வேலுச்சாமி, பொட்டு ராஜகோபால், பொன்ராம், முன்னாள் கவுன்சிலர் பிரேமா உட்பட பலர் கலந்து கொண்டனர்.   ஏற்பாடுகளை நகரச் செயலாளர் சக்திவேல் பாண்டியன், வடக்கு ஒன்றிய செயலாளர் சங்கரலிங்கம், தெற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ், சாத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் தேவதுரை ஆகியோர் செய்திருந்தனர். கலுசிவலிங்கம் நன்றி கூறினார்.

Tags : Anna ,Birthday Party ,Aruppukkottai ,
× RELATED கொடைக்கானல் அண்ணாநகர் சாலை படுமோசம்