×

ஆத்தூரில் கொமதேக சார்பில் முப்பெரும் விழா

ஆத்தூர், செப்.24:  ஆத்தூர் அருகே அம்மம்பாளையத்தில் கொமதேக சார்பில் முப்பெரும் விழா மலோசியா தொழில் அதிபர் பிரகதீஷ்குமார் தலைமையில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட கொமதேக பொதுச் செயலாளர் ஈஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தலைவாசல் பகுதியில் உள்ள ஏரிகளில், விவசாயிகள் அள்ளும் வண்டல் மண்ணுக்கு சிலர் பணம் வசூல் செய்வதாகவும், குடிமராமத்து திட்டப்பணிகளில் முறைகேடுகள் நடப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. விவசாயிகள் ஏற்கனவே ஏரிகளில் மண் வெட்டி எடுத்த பகுதிகளில், தற்போது அதிகாரிகள் மண் வெட்டி எடுக்க டெண்டர் விடுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நாமக்கல் எம்பி சின்ராஜ், சமீபத்தில் தமிழக முதல்வரை சந்தித்து முறையீடு செய்துள்ளார்.

இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், கொமதேக களத்தில் இறங்கி போராட்டம் நடத்தும். தலைவாசல் பகுதியில் கால்நடை பூங்கா அமைக்கும் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். இடைத்தேர்தலில் 2 தொகுதியிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்ற கடுமையாக உழைக்க கொமதேகவினர் தயாராக உள்ளனர். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ள இடங்களில் கொமதேக அதிக அளவில் போட்டியிடும். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது நாமக்கல் எம்.பி சின்ராஜ், மாவட்ட செயலாளர் ரமேஷ், மண்டல இளைஞரணி செயலாளர் விஜயகுமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் செந்தில், மகளிரணி செயலாளர் நந்தினி, மாநில செயற்குழு உறுப்பினர் மண்மணி, மாநில இளைஞரணி செயலாளர் சூர்யமூர்த்தி, மாநில துணை பொதுச்செயலாளர் தங்கவேல் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : grand ceremony ,Komadeka ,Attur ,
× RELATED கும்பகோணம் அருகே ஆரியச்சேரி அரசு பள்ளியில் முப்பெரும் விழா