சென்னகிரி அம்மா பூங்காவில் பயன்படுத்தாமல் வீணாகும் உடற்பயிற்சி கூடம்

ஆட்டையாம்பட்டி, செப். 26:   சென்னகிரி அம்மா பூங்காவில் ₹10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட உடற்பயிற்சி கூடம், திறக்கப்படாமல் வீணாகி வருகிறது.வீரபாண்டி ஒன்றியம் சென்னகிரி பஞ்சாயத்தில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், சுமார் ₹32 லட்சம் செலவில் அம்மா பூங்கா அமைக்கப்பட்டது. இதில் சிறுவர்கள் விளையாட சாதனங்கள் மற்றும் நடைபயிற்சி மேடை, டென்னிஸ் கோர்ட், உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது. ஆனால் திறக்கப்படவில்லை. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. ஆனால் 6 மாதத்தில் பூங்காவில் சிறுவர்கள் விளையாட பொருத்திய கருவிகள் உடைந்து போனது. உடற்பயிற்சி கூடம் பயிற்சியாளர் இல்லாததால், பூட்டியே கிடக்கிறது. இதனால் ₹10 லட்சம் மதிப்பிலான  உடற்பயிற்சி  கருவிகள் அனைத்தும் வீணாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பூங்காவில் உள்ள சிறுவர்களுக்கான விளையாட்டு கருவிகளை புதுப்பிக்க வேண்டும். பயிற்சியாளரை நியமித்து உடற்பயிற்சி கற்றுத்தர ஏற்பாடு செய்ய வேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Gymnasium ,Chennagiri Amma Park ,
× RELATED சென்னை திருவல்லிக்கேணியில் நவீன...