×

உலக இருதய தினத்தையொட்டி மாரத்தான் போட்டிக்கு 2000 பேருக்கு மேல் பதிவு காவேரி மருத்துவமனை நிர்வாகிகள் தகவல்

காரைக்குடி, செப். 26: காரைக்குடி காவேரி மருத்துவமனை சார்பில் உலக இருதய தினத்தை முன்னிட்டு நடத்தப்பட உள்ள பிரமாண்ட மாரத்தான் போட்டியில் 2000த்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர் என மருத்துவமனை செயல் இயக்குநர் டாக்டர் சலீம், மருத்துவ நிர்வாகி டாக்டர் காமாட்சிசந்திரன் ஆகியோர் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், காரைக்குடி காவேரி மருத்துவமனை சார்பில் உலக இருதய தினத்தை முன்னிட்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வரும் செப்.29ம் தேதி காலை 6.30 மணிக்கு மாரத்தான் போட்டி நடத்தப்பட உள்ளது. இதில் ஆண்கள் பிரிவில் 16 வயது முதல் 25 வயதினரும், 26 முதல் 40 வயது வரை, 40 வயதுக்கு மேல் என 3 பிரிவாக நடத்தப்பட உள்ளது. பெண்கள் பிரிவில் 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிரிவிற்கான போட்டியும் நடத்தப்பட உள்ளது.

இதுவரை 2000த்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ள பதிவு செய்துள்ளனர். போட்டியை கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை வகித்து துவக்கி வைக்க உள்ளார். எஸ்.பி ரோஹித்நாதன் ராஜகோபால், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன், என்.சி.சி 9வது பட்டாலியன் கமாண்டர் அஜய்ஜோஷி, டி.எஸ்.பி அருண் உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் போட்டியில் கலந்து கொள்ள நாளைக்குள் பதிவு செய்ய வேண்டும். போட்டி ஏற்பாடுகளை காரைக்குடி காவேரி மருத்துவமனை மாரத்தான் ஒருங்கிணைப்பு குழு மற்றும் அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வித்துறை முதல்வர் சுந்தர் ஆகியோர் செய்து வருகின்றனர். முன்பதிவு செய்தவர்களுக்கு பதிவு குறித்த தகவல் எஸ்எம்எஸ் மூலம் அவரது செல்போன் எண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பதிவு செய்ய 93844 46361, 93603 33759 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Tags : Cauvery Hospital ,administrators ,World Heart Day Marathon ,
× RELATED ஓபிஎஸ் அணியினர் அதிமுகவில் ஐக்கியம்