எலச்சிபாளையத்தில் மா.கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

திருச்செங்கோடு, செப்.26:எலச்சிபாளையம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், பஸ்  நிறுத்தம் அருகே  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  ஆர்ப்பாட்டம் நடந்தது.  எலச்சிபாளையத்தை  மையமாகக் கொண்டு  இயங்கி வந்த 108 ஆம்புலன்ஸ் சேவை மையம், தற்போது குமாரமங்கலத்திற்கு மாற்றப்பட்டதால், இப்பகுதியில் நிகழும் விபத்துக்களுக்கு உரிய நேரத்தில் 108 ஆம்புலன்ஸ் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே, மீண்டும் இங்கு இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  எலச்சிபாளையம் பஸ்  நிறுத்தத்தில், கழிப்பிடம், நிழற்கூடம் அமைக்க வேண்டும். அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும். விண்ணப்பித்த அனைவருக்கும் முதியோர் பென்ஷன் உடனடியாக வழங்க வேண்டும். காவல் நிலையம் பின்புறம்  உள்ள நூலகத்திற்கு  கட்டிடம் புதிதாக கட்டி தரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் சுரேஷ், தொடக்க வேளாண்மை கூட்டுறவு இயக்குனர் மாரிமுத்து, ஒன்றியச் செயலாளர் சுரேஷ், ஒன்றியக்குழு உறுப்பினர்  வெங்கடாசலம், ரமேஷ்,  கிளை செயலாளர்கள் சந்திரன், ஜெயந்தி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டனர். எலச்சிபாளையம் முன்னாள் கிளை செயலாளர் கிட்டுசாமி  நன்றி கூறினார்.

Related Stories: