×

சேந்தமங்கலத்தில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

சேந்தமங்கலம், செப்.26: சேந்தமங்கலம் வட்டாரத்தில், மாற்றுத்திறன் கொண்ட 18 வயது வரையுள்ள மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் சேந்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. முகாமை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் உஷா தொடங்கி வைத்தார். இம்முகாமில் காது, மூக்கு, தொண்டை, கண், காது, எலும்பு, மன நல, குழந்தைகள் நல மருத்துவர்கள் மாணவ, மாணவிகளை பரிசோதனை செய்து, தேசிய அடையாள அட்டை, உபகரணம் மற்றும் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்தனர். மொத்தம் 156 பேர் கலந்து கொண்டனர். இதில் 22 பேருக்கு தேசிய அடையாள அட்டை, 11 பேருக்கு உதவி உபகரணங்கள் மற்றும் 3 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக, முகாம் குறித்து மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி மற்றும் வாகன பிரசாரம் நடைபெற்றது. இதில் மாவட்ட உதவி திட்ட அலுவலர் குமார், பள்ளி உதவி தலைமையாசிரியர் விஜயலட்சுமி, வட்டார கல்வி அலுவலர் செல்வி, வட்டார வளமைய மேற்பார்வையாளர்    பாலுசாமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நந்தினிதேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Special Medical Camp ,
× RELATED 128 மாணவர்களுக்கு கல்வி உதவிதொகை