×

பிளாஸ்டிக் இல்லாத இந்தியா நகராட்சி அதிகாரிகள் விழிப்புணர்வு பேரணி

பள்ளிபாளையம், செப்.26: நிலத்தடி நீர்வளத்தை கடுமையாக பாதிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தவித்து பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் பள்ளிபாளையம் நகராட்சியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.பள்ளிபாளையம் நகராட்சியில், கடந்த ஜனவரி முதல் தேதியிலிருந்து இயற்கையை பாழடிக்கும் பிளாஸ்டிக் கேரி பேக்குகள், கப்புகள்  தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடைகள், உணவகங்களில் திடீர் சோதனையில் ஈடுபடும் பள்ளிபாளையம் நகராட்சி சுகாதார அதிகாரிகள், பிளாஸ்டிக் பைகளை கைப்பற்றி அப்புறப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பூமியையும், நீர்நிலைகளையும் பாழடிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை கைவிட வலியுறுத்தி, விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். நகராட்சி அலுவலகத்தில் துவங்கிய பேரணி சங்ககிரி சாலை, பாலம் ரோடு ஒன்பதாம்படி வழியாக மீண்டும் நகராட்சி அலுவலகத்தை வந்தடைந்தது. நகராட்சி ஆணையாளர் இளவரசன் பேரணியை துவக்கி வைத்து பங்கேற்றார். சேரன் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி வந்தனர். வழியெங்கும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டது.

Tags : India ,
× RELATED இந்தியா கூட்டணி கட்சிகள் கலந்தாலோசனை...