×

கிருஷ்ணகிரி அணையின் பழுதான மதகுகளை மாற்ற வேண்டும்கிருஷ்ணகிரி,

செப்.26:  கிருஷ்ணகிரி அணையின் பழுதான மதகுகளை உடனடியாக மாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் பன்னீர்செல்வம், கோபால கிருஷ்ணன், கல்லாவி ரவி, விவேகானந்தன், ஜாக்கப், விஜயக்குமார், ராமன், ஜெயவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் வின்சென்ட் வரவேற்புரையாற்றினார்.
இதில் சார்பு அணிகளின் நிர்வாகிகள் ஆறுமுக சுப்பிரமணி, கோவிந்தசாமி, முபாரக், லலித் ஆண்டனி, ஷபிஅகமது, ராமமூர்த்தி, ராமச்சந்திரன், ராஜேந்திரவர்மா, சேகர், ஊத்தங்கரை பூபதி, பர்கூர் அசோகன், ஜெயபிரகாஷ், மத்தூர் அழகேசன் ஆகியோர் பங்கேற்று பேசினர். நகர செயலாளர் கமலகண்ணன் நன்றி கூறினார். கூட்டத்தில் காந்தியின் 150வது பிறந்தநாள் விழாவினையொட்டி, கிருஷ்ணகிரியில் பாதயாத்திரை செல்வது, மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொள்வது, கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டாலும், மதகுகள் பழுதால் 42 அடிக்கு மேல் தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, விவசாயிகளின் நலன் கருதி அணையில் பழுதான மதகுகள் மாற்றிமைக்கும் பணிகள் உடனே தொடங்கிட வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags : Krishnagiri ,dam ,
× RELATED கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு