×

ஓசூரில் தமிழக விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

ஓசூர், செப்.26: ஓசூர் ராம் நகரில், கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு ஓசூர் ஒன்றிய தலைவர் நாராயணப்பா தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி மாவட்ட துணைத்தலைவர் நரசிம்மமூர்த்தி, செயலாளர் சந்திரசேகர், துணை செயலாளர் நாகராஜ், மகளிரணி தலைவி கிரிஜம்மா, துணை தலைவி யசோத ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் ஸ்ரீராமரெட்டி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தின் போது, கொடியாளம் அணையிலிருந்து வரும் தண்ணீரை பாகலூர் முதல் பேரிகை வரை உள்ள 35 ஏரிகளை நிரப்ப வேண்டும். ஆழியாளம் அணைக்கட்டில் இருந்து, ராயக்கோட்டை பகுதியில் உள்ள ஏரிகளை நிரப்ப வேண்டும். விவசாயிகளுக்கு உடனே மின் இணைப்பு வழங்க வேண்டும். ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி பகுதிகளில் தனியார் உரக்கடைகளில் போலி விதைகள், பூச்சி மருந்துகள் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் லோகேஸ்ரெட்டி, நாகராஜ், ராமன், சின்னசாமி, உமாபதி, நாராயணன், நாகராஜ், சம்பங்கிராமையா, பிரகாஷ், சீனுவாசன், வெங்கடேஷ், நாராயணரெட்டி உள்ளிட்ட  500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags : Tamilnadu Farmers Association ,Hosur ,
× RELATED கனமழை காரணமாக ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் நீர்வரத்து அதிகரிப்பு