×

மாரியம்மன் கோயில் திருவிழா

திருவாடானை, செப்.26:  திருவாடானை தெற்கு ரத வீதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் தீபாராதனைகள் நடைபெற்று வருகிறது. கோயில் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. விழாவின் சிறப்பு நிகழ்வாக நேற்று பூத்தட்டு எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. விழா நடைபெறும் ஒவ்வொரு நாளும் இரவு கலைநிகழ்ச்சிகள், வாண வேடிக்கைகள் நடைபெற்றது.

Tags : Mariamman Temple Festival ,
× RELATED மாரியம்மன் கோயில் திருவிழா சிறப்பாக...