×

டைட்டன் நிறுவனம் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்காக நடமாடும் அறிவியல் ஆய்வகம்

கிருஷ்ணகிரி, செப்.26: டைட்டன் நிறுவனம், அகஸ்தியா இன்டர்நேஷனல் பவுண்டேஷனுடன் இணைந்து அரசு பள்ளி மாணவர்களுக்காக `நடமாடும் அறிவியல் ஆய்வகங்களை’ அறிமுகம் செய்தது.
ஐந்தாம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடப் பிரிவுகளில் மேம்பட்ட மற்றும் அனுபவமிக்க கற்றல் அனுபவத்தை இந்த ஆய்வகங்கள் வழங்கும். கல்வியில் பின் தங்கிய மாணவர்கள் வேடிக்கையான ஈடுபாட்டுடன் கல்வி கற்கவும், கற்றலின் மதிப்பு குறித்த விழிப்புணர்வை அவர்களிடம் ஏற்படுத்தும். நடமாடும் அறிவியல் ஆய்வகத்தை, அகஸ்தியா இன்டர்நேஷனல் பவுண்டேஷன் மற்றும் டைட்டன் நிறுவனத்தின் பெருநிறுவன நிலைத்தன்மை தலைவருமான தர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி ராஜேந்திரன் ஆகியோர், கடந்த 20ம் தேதி கிருஷ்ணகிரியில் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
விழாவில் டைட்டன் நிறுவனத்தின் தலைவர் தர், அகஸ்தியா இன்டர்நேஷனல் பவுண்டேஷன் வள அணிதிரட்டல் தலைவர் ராவ்  பேசுகையில், ‘ஆசிரியர்கள் பயிற்சி திட்டம் 3 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்பட உள்ளது. இதில் 1800 பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. நடமாடும் அறிவியல் ஆய்வக திட்டத்தால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொலைதூர பகுதிகளைச் சேர்ந்த 8100 குழந்தைகள் பலன் பெற்றுள்ளனர். மேலும் கூடுதலான 2 நடமாடும் ஆய்வகத்தால், தனித்துவமிக்க 5 ஆயிரம் குழந்தைகள் பயன்பெறுவர். கிருஷ்ணகிரியில் மேலும் 32 பள்ளிகளை சென்றடையும் நோக்கில், மேலும் 2 கூடுதல் நடமாடும் அறிவியல் ஆய்வகத்தை டைட்டன் அறிமுகம் செய்துள்ளது. தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு மற்றும் என்சிஇஆர்டி பாடத்திட்டத்தை உள்ளடக்கி கற்பித்தல் அணுகுமுறை இருக்கும்,’ என்றனர்.

Tags : Government School Students ,Mobile Science Lab ,
× RELATED உயர் படிப்புக்கு நுழைவு ேதர்வு எழுத சிறப்பு பயிற்சி துவக்கம்