×

திறந்தவெளி சுகாதாரமற்ற இறைச்சி கடைகள்

சாயல்குடி, செப்.26:  மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, கீழக்கரை என பல்வேறு ஊர்களில் நகர்பகுதியில் 500க்கும் மேற்பட்ட ஆட்டு இறைச்சி கடைகள் உள்ளன. இதுதவிர ராமநாதபுரம் நகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் மீன்கடைகள் செயல்பட்டு வருகிறது. மீன்கடைகளின் இறைச்சி கழிவுகளை குப்பைத் தொட்டிகள் மற்றும் சாக்கடைகளில் கொட்டுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

பொதுவாக ஆடுவதைக் கூடத்தை பெரும்பாலான இறைச்சி கடைக்காரர்கள் பயன்படுத்துவதில்லை. ஆடுகள் அனைத்தும் கடைகளிலேயே திறந்த வெளியில் அறுக்கப்படுகிறது. இதன் கழிவுகள் சாலைகளிலும், சாக்கடைகளிலும் கொட்டுகின்றனர். சுகாதாரமற்ற முறையில் தெரு ஓரங்களில் திறந்தவெளி கடைகளை அமைத்து ஆடு, மீன், கோழி, இறைச்சி கடைகள் செயல்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களிலும் சுகாதாரமின்றி இறைச்சி கடைகள் செயல்படுவதாக பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகள் தொடர்ந்து புகார் தெரிவித்தாலும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.

Tags : Healthy Meat Shops ,
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை