×

மத்தூரில் திரிபுரசுந்திரி சோமேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம்

போச்சம்பள்ளி, செப்.26:  மத்தூரில் அழகு திரிபுரசுந்தரி சோேமஸ்வரர் ஜோதிலிங்க கோயிலில் 2ம் ஆண்டு வருஷாபிஷேக விழா மற்றும் திருக்கல்யாணம் நடந்தது. நிகழ்ச்சியில் திருவிளக்கு பூஜை, புனிதநீர் வழிபாடு, பெருமாள் வழிபாடு, அம்மையப்பர் வழிபாடு ஆகியவை நடந்தது. தொடர்ந்து அழகு திரிபுரசுந்தரி உடனுறை சோமேஸ்வரருகும் பெருமாட்டிக்கும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சக்தி குமரானந்த சுவாமிகள் கலந்து கொண்டு திருக்கல்யாண உற்சவத்தை நடத்தி வைத்தார். அப்போது பெண்கள் திருமணத்திற்கு வேண்டிய சீர் வரிசைகள் மற்றும் மொய் வழங்கினர். அதனை தொடர்ந்து கேரள செண்டை மேளங்கள் முழங்க சுவாமி திருவீதி உலா நடந்தது. விழாவில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags : Mathur Tripurasundri Somesvar Tirukkayarayanam Festival ,
× RELATED வேனில் கடத்திய 2.1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்