×

பரமக்குடியில் கஞ்சா விற்பனை அமோகம் பலிகடாவாகும் மாணவர்கள்

பரமக்குடி, செப்.26:  பரமக்குடி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. இதனை தடுக்க வேண்டிய போலீசார் கண்டுகொள்ளாமல் உள்ளதால், மாணவர்கள் சீரழிந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பரமக்குடி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தடைசெய்யப்பட்ட போதை பொருள்களான பாக்கு,புகையிலை விற்பனை பெட்டிகடைகளில் தாராளமாக வெளிப்படையாக விற்பனை செய்யப்படுகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகள் அருகே விற்க தடையிருந்தும், யாரும் கண்டுகொள்வதில்லை.இ தனால் பள்ளி மாணவர்கள் பாதை மாறுகிறது. இதுபோன்ற சட்ட விரோதமான விற்பனை தொடர்ந்தாலும் போலீசார் பெயரளவுக்கு வழக்குப்பதிவு செய்கின்றனர். போதை பாக்கு, புகையிலை, கள்ளத்தனமாக டாஸ்மாக் மது விற்பனை என வழக்குப்பதிவு செய்து, பொருள்களை கைப்பற்றியதாக கணக்கு காட்டி முடித்து கொள்கின்றனர்.

போதை பொருள் எங்கிருந்து வந்தது. யார் விற்பனையில் ஈடுபடுகின்றனர். யார் மூலம் சப்ளை செய்யப்படுகிறது போன்ற விஷயங்களை கண்டுபிடித்து முற்றுப்புள்ளி வைப்பதற்கு பதிலாக போதை பொருள் வியாபாரிகள் மற்றும் விற்பனையாளர்களிடம் பணத்தை பெற்று கொண்டு கண்டுகொள்ளாமல் போலீசார் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுதவிர பரமக்குடி நகர் பகுதிகளான கிருஷ்ணா தியேட்டர், வாரசந்தை, பேருந்துநிலையம், மணிநகர், ஆற்றுபாலம் பகுதிகளிலும், பரமக்குடியை சுற்றியுள்ள கிராமபுறங்களிலும் கஞ்சா விற்பனை படுஜோராக விற்பனை நடைபெற்று வருகிறது. பரமக்குடி சந்தைக டை பகுதிகளான ஆற்றுப்பாலம், சின்னகடை, பெருமாள் கோவில் வைகை ஆற்றுக்குள் வெளிப்படையாக கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது.

அதிகமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்தே விற்பனை செய்யப்படுகிறது. இதனை தடுக்க வேண்டிய  போலீசார் கண்டுகொள்ளாமல் உள்ளதால் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கஞ்சாவுக்கு அடிமையாகி வருகின்றனர். பரமக்குடி நகர் பகுதியில் மாணவர்களுக்கு இடையே அடிதடி சம்பவங்கள் அதிகரித்துள்ளதற்கு முக்கியமான காரணம் கஞ்சா போதைக்கு மாணவர்கள் அடிமையாவது தான் என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஆகையால் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பரமக்குடி மற்றும் சுற்றுபுறப் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படும் இடங்களை  கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Paramakudi ,
× RELATED மகளை திருமணம் செய்து கொடுக்காததால்...