×

தென்னையில் சர்க்கரை தயாரிப்பு குறித்த பயிற்சி

கிருஷ்ணகிரி, செப்.26: கிருஷ்ணகிரி அடுத்த மலைச்சந்து கிராமத்தில் தென்னையில் சர்க்கரை தயாரிப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி வட்டாரத்தில் வேளாண்மைத்துறை மாநில விரிவாக்க திட்டங்களின் விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின்  கீழ் மலைச்சந்து கிராம பகுதி விவசாயிகளுக்கு தென்னையில் சர்க்கரை தயாரிப்பு குறித்த பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சியினை வேளாண்மை அலுவலர் பிரியா தொடங்கி வைத்து, தென்னை சாகுபடி தொழில்நுட்பங்கள், தென்னையில் மதிப்புக்கூட்டுப் பொருட்கள் தயாரிப்பு அதன் சந்தை வாய்ப்புகள் குறித்து விளக்கம் அளித்தார்.
இந்த பயிற்சியில் வேளாண் அறிவியல் மையம் தொழில்நுட்ப வல்லுநர் பூமதி பங்கேற்று, தென்னையில் சர்க்கரை தயாரிப்பு, வெல்லம் தயாரிப்பு செய்தல் உற்பத்தி தொழில்நுட்பங்கள், தென்னை சர்க்கரை மற்றும் தென்னை வெல்லத்தில் உள்ள சத்துக்கள் மற்றும் அதன் பயன்பாடுகள், மதிப்புக்கூட்டுப் பொருட்கள் சந்தை வாய்ப்புகள் குறித்து விளக்கம் அளித்தார். வேளாண்மை அலுவலர் கண்ணன், தென்னை சாகுபடியில் மகசூலை அதிகரிக்க மேற்கொள்ளும் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளித்தார். இந்த பயிற்சியில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் நந்தினி, தென்னைக்கு தேவைப்படும் நுண்ணூட்டங்கள், தென்னை டானிக் பயன்பாடு பயன்கள் குறித்து விளக்கம் அளித்தார். உதவி வேளாண்மை அலுவலர் புஷ்பாகரன், வேளாண்மைத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார். உதவி தொழில்நுட்ப மேலாளர் வெற்றிவேல் நன்றி கூறினார். இந்த பயிற்சியில் 40 விவசாயிகள் பங்கேற்று பயிற்சி பெற்றனர். இந்த செய்திக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் சரவணன் செய்திருந்தார்.

Tags : South ,
× RELATED சோதனைகளும் சாதனைக்கே!